விருதுநகர் மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை


விருதுநகர் மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை
x
தினத்தந்தி 19 Aug 2021 1:08 AM IST (Updated: 19 Aug 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் விருதுநகர் மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர், 
விருதுநகரை சேர்ந்த பரணி ராஜ், ஹரிபாலன், நிதார்த்தினி, லீதியாள், ருதிக்டானியல், சுஷ்மிதா, ஈழவளவன், பிரவீன்குமார், சூரியவர்தனன், திலக்கார்த்திக், விமலேஷ், தர்ஷனா ஆகிய 12 மாணவ-மாணவிகள் பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று வெற்றிக்கோப்பை பெற்றனர். இந்தநிலையில் செப்டம்பர் 14-ந் தேதி நேபாளத்தில் சர்வதேச சிலம்பப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்த 12 மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் 12 பேரும் கலெக்டர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து தாங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள தேவையான உதவிகளை  செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் உரிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் முத்துக்குமார் மற்றும் ஹரீஷ் கூறுகையில், இந்த 12 மாணவ - மாணவிகளும் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டால் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தில் சர்வதேச அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றனர்.

Next Story