சரக்கு ரெயில் நடுவழியில் பழுதானதால் பயணிகள் ரெயில்கள் தாமதம்


சரக்கு ரெயில் நடுவழியில் பழுதானதால் பயணிகள் ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 19 Aug 2021 1:14 AM IST (Updated: 19 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரெயிலில் ‘ஏர்ஓஸ் பிரேக் பைப்’ துண்டிக்கப்பட்டதால் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்று தாமதமாக புறப்பட்டு சென்றன.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரெயிலில் ‘ஏர்ஓஸ் பிரேக் பைப்’ துண்டிக்கப்பட்டதால் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்று தாமதமாக புறப்பட்டு சென்றன.

சரக்கு ரெயில் பழுது

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 59 காலிப்பெட்டிகளுடன் சரக்கு ெரயில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை வழியாக சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ெரயில் நிலையங்களுக்கு இடையே தாமலேரிமுத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது திடீரென சரக்கு ரெயில் பழுதாகி நடுவழியில் தானாக நின்றது.

ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் கார்ட் இருவரும் ஆய்வு மேற்கொண்டதில், ரெயில் என்ஜினில் இருந்து 53 மற்றும் 54-வது பெட்டிகளை இணைக்கும் பகுதியில் உள்ள ‘ஏர்ஓஸ் பிரேக் பைப்’ அதிக அழுத்தத்தால் துண்டிக்கப்பட்டது தெரிந்தது. 
இது குறித்து என்ஜின் டிரைவர் ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக வரும் அனைத்து ெரயில்களும் ஆங்காங்கே நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பயணிகள் ரெயில் தாமதம்

இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து ெரயில்வே மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி துண்டிக்கப்பட்டிருந்த ஏர்ஓஸ் பிரேக் பைப்பை சீரமைத்தனர். அதன்பிறகு சரக்கு ெரயில் அங்கிருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை யார்டுக்கு வந்தது.

இதனால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த கோவையில் இருந்து சென்னை வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூருவில் இருந்து சென்னை வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரத்துக்கு 4 நாள் இயக்கப்படும் இன்டர்சிட்டி ஆகிய 3 ெரயில்கள் ஒரு மணிநேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டன. 

சக்கரங்கள் சுழலாது

"இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏர்ஓஸ் பிரேக் பைப் துண்டிக்கப்பட்டால் அதற்கு அடுத்தடுத்துள்ள பெட்டிகளின் சக்கரங்கள் தானாக ‘ஏர்லாக்’ செய்து கொள்ளும். இதனால் சக்கரங்கள் சுழலாமல் ெரயில் தானாக நின்றுவிடும். அதேபோல் தான் மேட்டூரில் இருந்து வந்த சரக்கு ெரயிலின் 52 மற்றும் 53-வது பெட்டியில் ஏர்ஓஸ் பிரேக் பைப் துண்டிக்கப்பட்டதால், அடுத்தடுத்த 5 பெட்டிகளிலும் சக்கரம் சுழலாமல் ெரயில் தானாக நின்று விட்டது என்றனர்.

Next Story