சந்தியூரில் மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது
சந்தியூரில் மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது
சேலம்
சேலம் அருகே உள்ள சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து மாவுப்பூச்சி தாக்கக்கூடிய பருவம், ரகங்கள், தாக்கும் அறிகுறிகள் மற்றும் அதன் ஒருங்கிணைத்த மேலாண்மை முறைகள், தென்னை மரம் ஏறும் கருவியின் செயல் விளக்கம், பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகியவை பற்றி கேட்டுஅறிந்தார்.
அப்போது விவசாயிகளுக்கு, மாவுப்பூச்சி மேலாண்மை முறைகள் பற்றிய பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வேளாண்மை அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், தொழில்நுட்ப வல்லுனர்கள் மாலதி, மலர்கொடி, சுகன்யாகண்ணா, கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story