வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 40 பேருக்கு கொரோனா
சேலத்திற்கு வந்த 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
சேலம்
வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 117 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி பகுதியில் 13 பேர், எடப்பாடி மற்றும் மேச்சேரியில் தலா 6 பேர், ஓமலூரில் 7 பேர், நங்கவள்ளியில் 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 63 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
40 பேருக்கு பாதிப்பு
இதேபோல், நாமக்கல், தர்மபுரி, காஞ்சீபுரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கோவை, கடலூர், கரூர், சென்னை ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 40 பேருக்கும் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு இதுவரை 1,617 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story