சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில்  கைது
x
தினத்தந்தி 19 Aug 2021 6:48 AM IST (Updated: 19 Aug 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, ஆக.19-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட    கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 67). இவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக     கூறப்படுகிறது. 
மேலும் இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர்.
சிறையில் அடைப்பு
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு அந்தோணி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தோணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார்   வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story