புகையிலை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
புகையிலை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா, புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருளை கொண்ட குட்கா, பான்மசாலா, மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துவதால் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும். இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த பொருட்களை தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்து செல்லவோ, வினியோகிக்கவோ, விற்பனை செய்யவோ மாட்டேன். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களின் நலன் காக்க ஒத்துழைத்து உணவு வணிக பணிபுரிவோம் என்று வணிகர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story