சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது
x
தினத்தந்தி 19 Aug 2021 6:49 AM IST (Updated: 19 Aug 2021 6:49 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி கடத்தல்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது அந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கடந்த மாதம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமி காணாமல் சென்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் (22) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

போக்சோ சட்டம்

இந்த நிலையில் செமனாம்பதியில் உள்ள சதீஷ்குமார் வீட்டில் சிறுமியை வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கேரளா மாநிலம் வயநாடுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அங்கு வைத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Next Story