வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள மல்லேபாளையத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா மகன் வெங்கட்டராஜ் (வயது 28). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெங்கட்டராஜ், தாயார் லகுமம்மாவுடன் சண்டை போட்டு விட்டு ஊருக்கு அருகில் உள்ள ஜனார்தய்யா என்பவர் விவசாய நிலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைகாக ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டராஜ் இறந்தார். இதுகுறித்து அவருடைய அண்ணன் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======
Related Tags :
Next Story