ராம்நாயக் இந்தியில் எழுதிய, 'முன்னேறிடு முன்னேறிடு' புத்தகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்


ராம்நாயக் இந்தியில் எழுதிய, முன்னேறிடு முன்னேறிடு புத்தகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்
x
தினத்தந்தி 19 Aug 2021 2:26 PM IST (Updated: 19 Aug 2021 2:26 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ராம்நாயக் இந்தியில் எழுதிய, 'முன்னேறிடு முன்னேறிடு' என்ற புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.

இந்த புத்தகத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘இந்த புத்தகம் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை தூண்டும் விதமாக இருக்கும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இந்த புத்தகம் இடம்பெற வேண்டும் என்பது தனது விருப்பம்' என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், புத்தகத்தை எழுதிய உத்தரபிரதேச மாநில முன்னாள் கவர்னர் ராம்நாயக், ரிசர்வ் வங்கி இயக்குனர், ஆடிட்டர் குருமூர்த்தி, இந்த புத்தகத்தை வெளியிட்ட சாணக்யா வர்தா பதிப்பகத்தின் ஆசிரியர் அமிட் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story