பெங்களூரு-சென்னை 8 வழிச்சாலை திட்ட கருத்துக்கேட்பு கூட்டம் - கலெக்டர் பங்கேற்பு


பெங்களூரு-சென்னை 8 வழிச்சாலை திட்ட கருத்துக்கேட்பு கூட்டம் - கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 5:37 PM IST (Updated: 19 Aug 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-சென்னை 8 வழிச்சாலை திட்ட கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்றார்.

திருவள்ளூர்,

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தேசிக்கப்பட்ட பெங்களூரு-சென்னை விரைவு சாலை பகுதி 3 சாலை திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருமணிகுப்பம் கிராமத்தில் அமைய உள்ள 8 வழிச்சாலை கட்டுமான திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் மோகன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், காஞ்சீபுரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை, நில எடுப்பு) நாராயணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் செந்தூர்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து கலந்து கொண்டனர்.

அப்போது பெங்களூரு- சென்னை 8 வழினச் சாலை கட்டுமான பணிக்காக மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் நில எடுப்பின் போது மின் கம்பம், குடிநீர் குழாய்கள், விவசாய நிலங்கள், போன்றவை பாதிக்கப்படாமல் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகள் செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

மேலும் அந்த பகுதியில் நில எடுப்பின் போது 26 மரங்கள் அகற்றப்பட உள்ளது. அதற்கு பதிலாக 100 சதவீதம் மரங்கள் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story