முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் மரணம்
வேலூர் தொகுதி முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
காட்பாடி
வேலூர் தொகுதி முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி திருநகரைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 65). இவர் வேலூர் தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார்.
இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் மரணமடைந்தார்.
அவருடைய உடல் திருநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ெவற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.ம.மு.க.வில் சேர்ந்தார்.
வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர். தொழில் முரண்பாடுகள் சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
செங்குட்டுவனின் மனைவி ஜெயந்தி வேலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
Related Tags :
Next Story