வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது - 38 பவுன் நகை பறிமுதல்


வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது - 38 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 19 Aug 2021 7:18 PM IST (Updated: 19 Aug 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 38 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா எல்லைக்கு உட்பட்ட இருங்குன்றம்பள்ளி மறைமலைநகர் எல்லைக்குட்பட்ட ரெயில் நகர், திருக்கழுக்குன்றம் எல்லைக்குட்பட்ட கொத்திமங்கலம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

இதையடுத்து குற்றவாளியை பிடிக்க காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சக்தி பிரியா மேற்பார்வையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் உத்தரவின்பேரில் செங்கல்பட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சேரா ஆகியோர் மேற்பார்வையில் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பரனூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்தனர். அவரிடம் இருந்து 38 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர் மேலும் சிறப்பான முறையில் பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழும் பண வெகுமதியும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெற்றால் 7200102104 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story