மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்


மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
x
தினத்தந்தி 19 Aug 2021 7:37 PM IST (Updated: 19 Aug 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.

மாமல்லபுரம்,

கடல் அலைகள் 10 அடி உயரத்துக்கு சீறி எழும்பின. கடல் நீர் 20 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்தது. குறிப்பாக கரைப்பகுதியில் உள்ள மகிஷாசூரமர்த்தினி குடைவரை சிற்பம் வரை கடல் நீர் முன்னோக்கி வந்தது. கடந்த சில வாரங்களாக மாமல்லபுரம், நெம்மேலிகுப்பம், சூளேரிக்காட்டு குப்பம் மீனவர் பகுதியில் கடல் முன்னோக்கி வந்துவிட்டதால் கரைப்பகுதியில் வலைகள், படகுகள் போன்றவற்றை வைக்க இடம் இல்லாமல் மீனவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் நேற்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்ட போதும் சுற்றுலா வந்த வாலிபர்கள் சிலர் கடற்கரை கோவிலுக்கு பின்பக்கம் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று ராட்சத அலை பாறைகள் மீது மோதும் காட்சியை ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து கொண்டதை காண முடிந்தது.

Next Story