திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,823-க்கு ஏலம்


ஏலத்துக்கு வைக்கப்பட்டிருந்த பருத்தி.
x
ஏலத்துக்கு வைக்கப்பட்டிருந்த பருத்தி.
தினத்தந்தி 19 Aug 2021 8:58 PM IST (Updated: 19 Aug 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,823-க்கு ஏலம் போனது.

திருவாரூர்:-

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,823-க்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர்.
இந்த ஏலத்தில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர். 

விலை நிலவரம்

திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 823-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 309, சராசரியாக ரூ.7 ஆயிரத்து 624-க்கு விற்பனை நடந்தது. இந்த ஏலத்தில் 422 குவிண்டால் பருத்தி ரூ.32 லட்சத்து 29 ஆயிரத்து 607-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Next Story