பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2021 9:39 PM IST (Updated: 19 Aug 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி, மாநில நிர்வாகி டாக்டர் முனிரத்தினம், மகளிரணி நிர்வாகிகள் மதுபாலா, மணிலா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மாநில ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதிகுமரேசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 
அப்போது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும். தமிழகத்தின் நிதி ஆதாரங்களை தடுத்து நிறுத்த நினைக்கும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் நவீன், மதன், விஜி, சந்தோஷ், சண்முகம், செல்வம், செல்வ குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பெண்கள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட நிர்வாகி பூபால் நன்றி கூறினார்.

Next Story