மாவட்ட செய்திகள்

கோட்டப்பட்டி அருகேபுதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது + "||" + Husband arrested

கோட்டப்பட்டி அருகேபுதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது

கோட்டப்பட்டி அருகேபுதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
கோட்டப்பட்டி அருகே புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள வேலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவருடைய மனைவி மீனா (19). கடந்த 3 மாதங்களுக்கு முன் இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள கிணற்றில் மீனா பிணமாக கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருமணமாகி 3 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அரூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது கார்த்திக் வரதட்சணை கேட்டு மீனாவை கொடுமைப்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து புதுப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் கைது
பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் கைது
2. இளம் மனைவியை கொலை செய்து மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனா நாடகமாடிய கணவர்
மனைவியை கொலை செய்து அரசு மருத்துவமனை பின்புறம் எரித்து விட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
3. பல ஆண்களுடன் தொடர்பு: மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கைது
தீப்தி சோனியை திட்டமிட்டு அவரது கணவர் தேவேந்திரா, பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோர் கொலை செய்துள்ளனர்.