கொேரானா விதிகளை பின்பற்றாத ஜவுளிக்கடைக்கு ரூ.5,000 அபராதம்
தக்கோலத்தில் கெரோனா விதிகளை பின்பற்றாத ஜவுளிக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரக்கோணம்
தக்கோலத்தில் கெரோனா விதிகளை பின்பற்றாத ஜவுளிக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள், சிறு வணிக கடைகளில் யாரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.
செயல் அலுவலர் கணேசன் தலைமையில் ஊழியர்கள் இன்று தக்கோலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறுவணிக கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சமூக விலகலை பின்பற்றாமலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும் செயல்பட்ட ஒரு ஜவுளிக்கடைக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ரூ.5000 அபராதம் விதித்தார்.
Related Tags :
Next Story