அன்னூரில் கடையடைப்பு போராட்டம்
கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளரை பணிநீக்கம் செய்யக்கோரி அன்னூர் தாலுகாவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அத்து டன் விவசாயி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
அன்னூர்
கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளரை பணிநீக்கம் செய்யக்கோரி அன்னூர் தாலுகாவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அத்து டன் விவசாயி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
5 பிரிவுகளில் வழக்கு
அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு விவசாயி கோபால்சாமி என்பவர் சென்றார். அங்கு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் இருந்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கோபால்சாமி காலில் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கேட்பதுபோன்ற வீடியோ வெளியானது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் விவசாயி கோபால்சாமியை உதவியாளர் முத்துசாமி தாக்கும் மற்றொரு வீடியோ வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் ஆகியோர் நடந்த சம்பவத்தை மறைத்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் உதவியாளர் முத்துசாமி மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டது.
கடையடைப்பு போராட்டம்
இதற்கிடையே விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், நடந்த சம்பவத்தை மறைத்து தவறான தகவல் தெரிவித்த கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அன்னூர் தாலுகாவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலை 6 மணி முதல் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு
அன்னூர் பகுதியில் உள்ள குப்பேபாளையம், காட்டம்பட்டி, கணேச புரம், கரியாம்பாளையம், பெரியபுத்தூர், பொகலூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
பணி நீக்கம்
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை மறைத்து உயர் அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் தகவல் தெரிவித்து உள்ளனர். எனவே 2 பேரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் விவசாயி மீது போடப்பட்ட வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story