போக்குவரத்து விதிகளை மீறியதாக 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
வாணியம்பாடியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன் ஆகியோர் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்டனர்.
மோட்டார்சைக்கிளுக்கு தேவையான உரிய ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம், தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓட்டி வரப்பட்ட மற்றும் முகக் கவசம் அணியாமல் ஓட்டி வரப்பட்ட மொத்தம் 5 மோட்டார்சைக்கிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து மோட்டார் வாகனப் பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story