கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 Aug 2021 11:49 PM IST (Updated: 19 Aug 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் வார்டு, வாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா என்று கணக்கெடுப்பு பணி நடந்து வருகின்றது. 

இந்த பணியில் சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி அருகே பெந்தட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் சிவா மற்றும் ஆசிரியர்கள் பெந்தூர், பெந்தட்டி, பெடுதளா, பாரமண்ணு, மொத்த கம்பை, முள்ளெலா ஆகிய இடங்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி முதல் டோஸ் அல்லது 2-வது டோஸ் செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுத்தனர். 

அதன்படி மேற்கண்ட கிராமங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரங்களை கண்டறிந்து நேற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் பள்ளியில் நடந்தது. கிராம செவிலியர் சரோஜினி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையில் 85 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story