தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் விபத்து பகுதியை கண்டறிந்து தாசில்தார் ஆய்வு
தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் விபத்து பகுதியை கண்டறிந்து தாசில்தார் ஆய்வு செய்தார்.
தாராபுரம்
தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் விபத்து பகுதியை கண்டறிந்து தாசில்தார் ஆய்வு செய்தார்.
தேசிய நெடுஞ்சாலை
தாராபுரம்- ஒட்டன்சத்திரம் புறவழி சாலையில் விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தாசில்தார் சைலஜா நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
தாராபுரம் -ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை 24 மணிநேரமும் போக்குவரத்து நிறைந்த மிக முக்கியமான சாலையாக திகழ்ந்து வருகிறது. தாராபுரம் வழியேதான் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்கின்றன.
அதே போல் ஈரோடு, கோவை, திருப்பூர், பல்லடம், காங்கேயம், சேலம் உள்ளிட்ட பகுதி மக்கள் தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் தாராபுரம் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். இந்நிலையில் தாராபுரம் நகர பகுதியில் போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி ரோடு, பழனி சாலை, அலங்கியம் சாலை, பூளவாடி பிரிவு, ஐடிஐ கார்னர் உள்ளிட்ட பகுதிகள் விபத்து பகுதியாக கண்டறியப்பட்டது.
நடவடிக்கை
அதன்படி அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை கொண்டு மக்களுக்கு பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சங்கர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story