கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2021 12:31 AM IST (Updated: 20 Aug 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கீழத்தென்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். விவசாயி. இவருடைய மகள் சுமித்ரா (வயது 18). இவர் கடந்த 30-ந் தேதி விஷம் குடித்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுமித்ரா நேற்று முன்தினம் இறந்தார்.

பிளஸ்-2 படித்து முடித்திருந்த சுமித்ரா வேளாண் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். ஆனால் மதிப்பெண் குறைந்திருந்ததால் சேரமுடியாத நிலை ஏற்பட்டதாம். இதையடுத்து பெற்றோர் சுமித்ராவை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் படிப்பில் சேர்த்தனர். மேலும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்கவும் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த சுமித்ரா தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story