அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களுக்கு அபராதம்


அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 Aug 2021 12:48 AM IST (Updated: 20 Aug 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

செங்கோட்டை:

தமிழக-கேரள எல்லையான புளியரை வாகன சோதனைச்சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக பாரம் ஏற்றி வந்த ஒரு வைக்கோல் லாரி உள்பட 10 வாகனங்களுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதித்தனர்.  

Next Story