‘அவன் இவன்’ பட வழக்கில் டைரக்டர் பாலா விடுதலை
‘அவன் இவன்’ பட வழக்கில் டைரக்டர் பாலாவை விடுதலை செய்து அம்பை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
அம்பை:
‘அவன் இவன்’ பட வழக்கில் டைரக்டர் பாலாவை விடுதலை செய்து அம்பை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
வழக்கு
கடந்த 2011-ம் ஆண்டு டைரக்டர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் நடித்த ‘அவன் இவன்’ படம் வெளியானது.
இந்த படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலையும், சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும் அவதூறாக சித்தரித்து உள்ளதாக சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் அம்பை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அம்பை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படுதாகவும், டைரக்டர் பாலா நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கார்த்திகேயன் நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.
விடுதலை
அதன்படி, நேற்று காலை 10.30 மணிக்கு அம்பை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜரானார். அப்போது, உரிய முகாந்திரம் இல்லாததால் வழக்கில் இருந்து பாலாவை விடுதலை செய்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் டைரக்டர் பாலா சார்பில் வக்கீல் முகம்மது உசேன், மனுதாரர் தரப்பில் வக்கீல் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
Related Tags :
Next Story