நடக்க முடியாமல் தவித்த நாய்க்கு சிகிச்சை
வாகனத்தில் அடிபட்டு நடக்க முடியாமல் தவித்த நாய்க்கு சிகிச்சை
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நாய் ஒன்று வாகனத்தில் அடிபட்டு நடக்க முடியாமல் தவித்தது. இதைப் பார்த்த மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உடனடியாக அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கும் படி கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்களுக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் முகமதுகான் தலைமையில் சிவகங்கை கால்நடை மருத்துவமனை குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அடிபட்டு நடக்க முடியாமல் வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த நாய்க்கு ஊசி போட்டனர். பின்னர் அந்த நாயை சிவகங்கை கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story