கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
திங்கள்சந்தை அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திங்கள்சந்தை,
திங்கள்சந்தை அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முத்தாரம்மன் கோவில்
திங்கள்சந்தை அருகே சரல்விளையில் ஆலமூடு முத்தாரம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலை, இரவு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகளில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொள்வது வழக்கம். சம்பவத்தன்று இரவு பூஜைகளை முடித்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நகை கொள்ளை
மறுநாள் காலையில் பூஜை செய்ய பூசாரி வந்தார். அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கருவறைக்கு சென்று பார்த்தபோது, சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி, மூக்குத்தி, பொட்டு என 1¼ பவுன் நகை மற்றும் பூஜை பொருட்கள் மாயமாகி இருந்தன. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகி வினோ இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story