மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும்


மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும்
x

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசினார்.

சிவகாசி, 
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசினார்.
விழிப்புணர்வு கூட்டம் 
இந்திய பெட்ரோலியத்துறை, வட்டார போக்குவரத்து பிரிவு மற்றும் காவல்துறையினர் இணைந்து சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்தில் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. 
இதில் 50-க்கும் மேற்பட்ட கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு கூட்டத்துக்கு சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தவிர்க்க வேண்டும்
விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசியதாவது:- சிலர் விதிகளை மீறி வாகனங்களை இயங்கி வருகிறார்கள். உரிய உரிமம் பெற்று தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பலர் உரிய உரிமம் பெறாமல் வாகனங்களை இயங்கி வருகிறார்கள். இதனால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது.  அதே போல் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும் பெரும்பாலான விபத்துக்கு மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டியதே காரணம் என விபத்துக்கு பின்னர் தெரிகிறது. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டும்போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். 
 இவ்வாறு அவர் கூறினார். 
கூட்டத்தில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திலகராணி வரதராஜ், சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி, திருத்தங்கல் போக்குவரத்து பிரிவு போலீசார் செய்திருந்தனர்.

Next Story