முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது


முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2021 2:32 AM IST (Updated: 20 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழப்பழுவூர்:

மோதல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் அஜய்குமார்(வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மருதமுத்துவின் மகன் முருகன்(20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கீழப்பழுவூரில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி, கத்தி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் அஜய்குமாருக்கும், மற்றொரு தரப்பில் முருகனின் தந்தை மருதமுத்துவுக்கும் காயம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 பேர் கைது
இச்சம்பவத்தை அடுத்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி, கட்டையால் தாக்கியதாக மருதமுத்து மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனித்தனியே கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த சிலம்பரசன் (26), ராஜேந்திரனின் மகன் ராஜபாண்டி (25), செல்வத்தின் மகன் விக்ரம் (24), கேசவன் (20), சந்திரகாசனின் மகன் பிரபாகரன் (27), சேகரின் மகன் புகழ்மணி (22), மருதமுத்துவின் மகன் முருகன் (25), நேரு (22), முருகானந்தத்தின் மகன் கார்த்தி (26) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருதரப்பையும் சேர்ந்த 9 பேரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story