சேலத்தில் சாலையோரம் வசித்த நாமக்கல் முதியவர், மகள்களிடம் ஒப்படைப்பு


சேலத்தில் சாலையோரம் வசித்த நாமக்கல் முதியவர், மகள்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 20 Aug 2021 2:37 AM IST (Updated: 20 Aug 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சாலையோரம் வசித்த நாமக்கல் முதியவர், மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் தெருவாழ்வோர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சாலையோரம் ஆதரவின்றி வசித்து வரும் நபர்களை கண்டறிந்து மீட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் கார்மேகம் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் சேலம் மாநகரில் நேற்று ரவி (வயது 60) என்பவர் சாலையோரம் சுற்றித்திரிந்து வருவதை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டு மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் என்பதும், அவரது தந்தை குருசாமியும், அவருக்கு 2 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சாலையில் வசித்து வந்த ரவியை அவருடைய மகள்களிடம் ஒப்படைத்து மறுவாழ்வு கொடுக்கப்பட்டது. முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதியவர் ரவிக்கு தேவையான உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். 
பின்னர் சமூக நலத்துறை மூலம் ஏற்பாடு செய்த காரில் ரவி ஏறி அவரது சொந்த ஊரான மல்லசமுத்திரத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு கலெக்டர் கார்மேகம் கையசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாநகர போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் கும்பராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, துணை கலெக்டர் (பயிற்சி) கனிமொழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷாபனா அஞ்சும் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story