சேலத்தில் இரு தரப்பினர் மோதல்: குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது


சேலத்தில் இரு தரப்பினர் மோதல்: குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
x

சேலத்தில் இரு தரப்பினர் மோதலில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்
இரு தரப்பினர் மோதல்
சேலம் கந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள திரவுபதி கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குமரவேல் (வயது 22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை ரேஸ் செய்து புகையை அதிகமாக்கினார்.
அந்த புகை அசோக்குமார் மீது பட்டது. இதுதொடர்பாக அவர் குமரவேலிடம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குமரவேல், அவருடைய கூட்டாளிகள் அசோக்குமாரை தாக்கினர். இந்த இரு தரப்பு மோதல் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
வீடு மீது தாக்குதல்
இதற்கிடையே அசோக்குமார் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ரவிகுமார், மணிகண்டன், பிரசாந்த் உள்ளிட்டவர்கள் குமரவேல் வசிக்கும் பகுதியில் கருப்பசாமி என்பவரது வீட்டை அடித்து நொறுக்கினர்.
இந்த இரு தரப்பு மோதலால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிகுமார் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
அப்படி இருந்தும் இரு தரப்பினர் மோதலால் எம்.ஜி.ஆர்.நகர், கந்தம்பட்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதுதொடர்பாக தங்கராஜ், குமரவேல், பிரசாந்த், ரவிகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் நாகராஜன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதை ஏற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் தங்கராஜ், குமரவேல், பிரசாந்த், ரவிக்குமார் ஆகிய 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story