மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் பணியிட மாற்றம் + "||" + 2 policemen transferred from Perambalur Armed Forces

பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் பணியிட மாற்றம்

பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் பணியிட மாற்றம்
பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் தெரிவித்தார். அதில், திருமணமான ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் தன்னுடன் செல்போனில் செல்பியாக புகைப்படங்களை எடுத்து கொண்டார். வீட்டில் பெற்றோர் தனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்த சூழ்நிலையில், அந்த போலீஸ்காரர் அந்த புகைப்படங்களை வைத்து கொண்டு தன்னை மிரட்டி வருகிறார், என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த சூழ்நிலையில், புகார் கூறிய பெண் போலீஸ் இந்த புகாரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், சமரசமாக செல்வதாகவும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த புகார் முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் அந்த பெண் போலீஸ் தனது வருங்கால கணவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அந்த போலீஸ்காரர் பெண் போலீசிடமும், அவரது வருங்கால கணவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த சூழ்நிலையில், அந்த பெண் போலீசை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படைக்கும், போலீஸ்காரரை கரூர் மாவட்ட ஆயுதப்படைக்கும் பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
முதன்மை கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
3. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
4. முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்
காரியாபட்டி தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.