2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை, காவலாளி கைது; போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை


2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை, காவலாளி கைது; போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2021 2:18 PM IST (Updated: 20 Aug 2021 2:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 52). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்கிறார். இவர் தனியாக வாடகைக்கு அறை எடுத்து அதில் வசித்து வந்தார்.

தனக்கு தெரிந்த 10 வயது, 9 வயது நிரம்பிய 2 சிறுமிகளிடம் அடிக்கடி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது சிறுமிகளின் பெற்றோர், மாம்பலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளி ரகுபதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story