மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.30, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் 20-ந்தேதி (இன்று), 23-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 20, 21, 23, 25-ந்தேதிகளில் சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 22-ந்தேதி சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 11.30 மணி, மதியம் 1 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் 20, 23, 25-ந்தேதிகளில் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 20, 21, 23, 25-ந்தேதிகளில் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே மதியம் 12.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 22-ந்தேதி செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே மதியம் 1 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 21-ந்தேதி 35 நிமிடம் தாமதமாக 1.35 மணிக்கு புறப்படும்.
* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 20, 21, 22, 23, 25-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
* திருமால்பூர்-கடற்கரை இடையே 20, 21, 22, 23, 25-ந்தேதிகளில் மதியம் 12 மணிக்கு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story