திருவள்ளூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி பழுதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு - பயணிகள் அவதி


திருவள்ளூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி பழுதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு - பயணிகள் அவதி
x
தினத்தந்தி 20 Aug 2021 4:44 PM IST (Updated: 20 Aug 2021 4:44 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி பழுதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளானார்கள்.

திருவள்ளுர்,

திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர்- திருவள்ளூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 8 மணி அளவில் 3-வது ரெயில் பாதையில் செல்லக்கூடிய உயர் மின்னழுத்த கம்பியில் பழுது ஏற்பட்டது.

இதன் காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் புறநகர் ரெயில்கள் நிறுத்தப்பட்டது.

காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதிக்குள்ளானார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தனர்.

45 நிமிடத்துக்கு பிறகு அந்த தடத்தில் புறநகர் ரெயில்கள் இயங்க தொடங்கியது.

Next Story