எழில்மிகு அரசு அலுவலக திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த கலெக்டர்
எழில்மிகு அரசு அலுவலக திட்டத்தின் கீழ் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.
திருவள்ளூர்,
எழில்மிகு அரசு அலுவலகம் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பைகளை அகற்றினார். கலெக்டர் அலுவலக கழிவறை மற்றும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்த ஒட்டடைகளை தானே அகற்றினார். அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரித்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்கள் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story