மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 Aug 2021 6:23 PM IST (Updated: 20 Aug 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

தைலாவரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.

வண்டலூர், 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் வசந்த கருப்புசாமி (வயது 23). இவர் சென்னையில் தங்கி கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தனது நண்பர் சேதுராமன் (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். தைலாவரம் அருகே செல்லும்போது பின்னால் வந்த மினி லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்த கருப்பசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயம் அடைந்த சேதுராமனை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story