திருப்போரூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பலி


திருப்போரூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 20 Aug 2021 7:57 PM IST (Updated: 20 Aug 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் பலியானார்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கரும்பாக்கம் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்ட பணிக்காக பெண்கள் சென்று கொண்டிருந்தனர், அப்போது செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதில் புஷ்பா (வயது 43) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் சவுமியா, மஞ்சுளா, அன்னம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கார் தாறுமாறாக ஓடியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இரு சக்கரவாகனங்களும் சேதம் அடைந்தன.

விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்,

Next Story