பொதுமக்களிடைேய கொரோனா விழிப்புணர்வு


பொதுமக்களிடைேய கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 20 Aug 2021 8:11 PM IST (Updated: 20 Aug 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

தக்கோலத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அரக்கோணம்

தக்கோலத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தக்கோலம் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் தக்கோலம் போலீசார் சார்பில், அங்குள்ள பயன்டியம்மன் கோவில் அருகில் கிராம மக்களிடையே போலீசார் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். 

அதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முகக் கவசங்கள், கிருமிநாசினி பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் வழங்கினார். 

மேலும் சோப்புப்போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்ைவ ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், தக்கோலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி, அரக்கோணம் மது விலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, தக்கோலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story