வீட்டிற்குள் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
ஏலகிரி மலையில் வீட்டிற்குள் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலையில் வீட்டிற்குள் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள கோட்டூர் - பள்ளக்கனியூர் கிராமங்களுக்கு இடையே சென்னை பகுதியை சேர்ந்த ஒருவரின் பங்களா உள்ளது. இதனை மனோஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார்.
மேலும் கூண்டு அமைத்து 20-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சென்றபோது சமையலறை சுவர் மீது 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஏறி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி சமையல் அறையில் இருந்த 15 அடி நீள மலைப்பாம்பு மீட்டனர்.
பின்னர் அவற்றை லாவகமாக மூட்டைகட்டி வேலை கிரிமலை 3-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று விட்டனர்.
கோழியை விழுங்க மலைப்பாம்பு வந்திருக்கலாம் என்றும் கோழியின் கூண்டுக்குள் செல்ல முடியாததால் பங்களாவுக்குள் வந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story