கொரோனா தடுப்பூசி போடும் முகாம்


கொரோனா தடுப்பூசி போடும் முகாம்
x
தினத்தந்தி 20 Aug 2021 9:51 PM IST (Updated: 20 Aug 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

வாணியம்பாடி

ஆலங்காயத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் அரசு சமுதாய சுகாதார நிலையம், அனைத்து வியாபாரிகள் சேவை சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை நடத்தியது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி தலைமை தாங்கினார். 

முகாமில் 18 வயது முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

 முகாமில் சங்க தலைவர் ஸ்ரீதரன், சுமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story