இருசக்கர வாகன ஷோரூமில் புகுந்து பணம் கொள்ளை
இருசக்கர வாகன ஷோரூமில் புகுந்து பணம் கொள்ளை
கணபதி
கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் தனியார் மருத்துவமனை எதிரில் பிரபலமான இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக ஷோரூமினை மாலை 5 மணியளவில் அடைத்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல மாலை 5 மணிக்கு ஷோரூமினை பூட்டிவிட்டு சென்றனர். காவலாளி ஒருவர் மட்டும் அங்கு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல ஷோரூமினை ஊழியர்கள் திறந்து பார்த்த போது பணம் வைத்திருந்த டேபிள் திறந்த நிலையில் கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஷோரூம் மேலாளர்சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
உடனே கோவை சட்டம், ஒழுங்கு போலீஸ் உதவி கமிஷனர் அருண், புலனாய்வு உதவி கமிஷனர் ராஜபாண்டியன், கைரேகை நிபுணர் குழுவினர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் ஷோரூமின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து எடுத்து, அதன் வழியாக புகுந்து கை வரிசை காட்டியது தெரிய வந்தது. இந்தசம்பவம் பற்றி சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story