கலெக்டர் பேசுவதாக கூறி ரூ.50 ஆயிரம் மோசடி செய்ய முயற்சி
வாணியம்பாடி ரியல் எஸ்டேட் அதிபரி்டம் கலெக்டர் பேசுவதாக கூறி ரூ.50 ஆயிரம் மோசடி செய்ய முயன்ற மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி ரியல் எஸ்டேட் அதிபரி்டம் கலெக்டர் பேசுவதாக கூறி ரூ.50 ஆயிரம் மோசடி செய்ய முயன்ற மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி -அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்.
இவரது செல்போனில் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் உதவியாளர் என்றும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் என்றும் பேசி, திருமண மண்டபம் வாடகைக்கு வேண்டும் என்றும் பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினார்.
பின்னர் தனியார் வங்கி எண் ஒன்றை அனுப்பி அவசரமாக இந்த வங்கி கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
சந்தேகம் அடைந்த ஸ்ரீதர் உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில், பணம் கேட்டு அனுப்ப கூறிய வங்கி கணக்கு எண், மர்மநபர் பேசிய செல்பான் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, இந்த எண்ணில் இருந்து திருப்பத்தூர் கலெக்டர் மற்றும் அவரது உதவியாளர் போல் பேசி பணத்தை மோசடி செய்ய முயற்சி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீதர் கூறியுள்ளார்.
விசாரணை
புகாரின்பேரில் வாணியம்பாடி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம் தலைமையில் ஒரு பிரிவு போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலெக்டரின் பெயரிலேயே மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story