கந்திகுப்பம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து


கந்திகுப்பம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 20 Aug 2021 10:12 PM IST (Updated: 20 Aug 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

பர்கூர்:
கந்திகுப்பம் அருகேயுள்ள எலத்தகிரி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). சுகாதார ஆய்வாளருக்கான படிப்பை முடித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலை அறிந்த அந்த பெண்ணின் சகோதரர் விக்னேசை கண்டித்துள்ளார். இதனால் 2 தரப்பினர் இடையே தகராறு இருந்தது. சம்பவத்தன்று விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றார். அப்போது பெண்ணின் சகோதரர் மற்றும் இவருடைய தாயார் ஆகியோர் விக்னேசை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தினார்கள். இதில் காயம் அடைந்த விக்னேஷ் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் தாயார் உள்பட 2 பேர் மீது கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story