டிரைவர் சாவு
திண்டுக்கல் அருகே விஷம் குடித்து டிரைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே உள்ள பெத்தியகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 37). இவர் கோவை மாவட்டம் காந்திநகரில் குடும்பத்துடன் தங்கி டிரைவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
அதன்பின்னர் அவருக்கு சரியான வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சின்னத்துரை சம்பவத்தன்று விஷம் குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னத்துரை நேற்று இறந்தார். இந்த தற்கொலை குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story