வால்பாறையில் சாகச சுற்றுலா கொண்டு வர முடிவு
வால்பாறையில் சாகச சுற்றுலா கொண்டு வர முடிவு செய்யப் பட்டு உள்ளதுடன், சோலையாறு அணை பூங்காவும் மேம்படுத்தப்படுகிறது.
வால்பாறை
வால்பாறையில் சாகச சுற்றுலா கொண்டு வர முடிவு செய்யப் பட்டு உள்ளதுடன், சோலையாறு அணை பூங்காவும் மேம்படுத்தப்படுகிறது.
வால்பாறை
கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வால்பாறை முக்கிய சுற்றுலா மையமாக உள்ளது. இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்கும் வகையில், சுற்றுலா மையங்களை மேம்படுத்தவும், சாகச சுற்றுலா கொண்டு வரமுடிவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் கூறியதாவது:-
சாகச சுற்றுலா
தமிழகத்தில் நீர்நிலைகள் இருக்கும் பகுதியில் சாகச சுற்றுலாவை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் வால்பாறை மற்றும் ஆழியாறு பகுதியில் நீர்நிலைகளில் சாகச சுற்றுலா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வு முடிந்ததும் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சாகச சுற்றுலா கொண்டு வரப்படும்.
சோலையாறு அணை பூங்கா
மேலும் சோலையாறு மற்றும் ஆழியாறு அணை பூங்காக்களை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்த விவரங்கள் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவது இல்லை.
எனவே அதுகுறித்த விவரங்களை சுற்றுலாத்துறைக்கு தெரிவிக்கலாம். இதன் மூலம் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும். அதுபோன்று இங்குள்ள சுற்றலா மையங்களும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story