கோழிகளை தாக்கும் ஈகோலை கிருமியை கட்டுப்படுத்த குடிநீரில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் தகவல்


கோழிகளை தாக்கும் ஈகோலை கிருமியை கட்டுப்படுத்த குடிநீரில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:36 PM IST (Updated: 20 Aug 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

கோழிகளை தாக்கும் ஈகோலை கிருமியை கட்டுப்படுத்த குடிநீரில் கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்:
வானிலை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று 6 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 30 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 24-ந் தேதி 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்த வரை அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 85, 95, 90, 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45, 50, 50, 50 சதவீதமாகவும் இருக்கும்.
பரவலாக மழை
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் பரவலாக லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் முட்டை அயற்சி மற்றும் வெள்ளை கழிச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கான நீர் பரிசோதனை செய்து, கோழிகளுக்கு தகுந்த தடுப்பூசி போட வேண்டும். மேலும் ஈகோலை கிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்த குடிநீரில் தகுந்த கிருமிநாசினியை கலந்து பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story