பஸ் நிலையத்திற்குள் சேதமடைந்த கட்டிடம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்குள், பஸ்கள் நிற்குமிடத்தில் கட்டிடம் சேதமடைந்துள்ளது.தூண் விரிசல் விட்டுள்ளது
உடுமலை
உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்குள், பஸ்கள் நிற்குமிடத்தில் கட்டிடம் சேதமடைந்துள்ளது.தூண் விரிசல் விட்டுள்ளது
மத்திய பஸ் நிலையம்
உடுமலை பழனி சாலையில் நகராட்சி மத்திய பஸ்நிலையம் உள்ளது. இங்கு பஸ்நிலைய வளாகத்தில் தாராபுரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் கடைகளும் அதற்கு முன்புறம் பயனிகள் உட்கார்வதற்கான இருக்கைகள் உள்ள இடமும் உள்ளது. அந்த முன்பகுதியை தாங்கிநிற்க பில்லர்களும் (தூண்கள்) உள்ளன. இதில் தாராபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தில் பயணிகள் நிற்ககூடிய இடத்தில் கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்துள்ளது.
விரிசல்
அத்துடன் அந்த பகுதியை தாங்கி நிற்கும் கான்கிரீட் தூண் விரிசல் விட்டுள்ளது. அந்த இடத்தில் பயணிகள் அதிகம் நிற்பது வழக்கம்.
பயணிகள் வந்து செல்வதற்கான வழித்தடமும் அங்கு உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் அமர்ந்துள்ளனர். அதனால் அங்கு பஸ்நிலைய கட்டிடத்தில்சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story