வியாபாரியை மிரட்டிய வாலிபர் கைது


வியாபாரியை மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2021 12:33 AM IST (Updated: 21 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை கனகநாத நாயனார் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சீவலப்பேரி ரோட்டில் நேற்று முன்தினம் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பவர் கந்தசாமியிடம் இலவசமாக பழங்கள் தருமாறு கேட்டார். 

மேலும் சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து நேற்று மணிகண்டனை கைது செய்தார்.

Next Story