மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை
பணகுடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள கலந்தபனை தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 82). இவருடைய மனைவி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த தங்கசாமி சரியாக சாப்பிடாமல் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story