சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 முதல் 6 மணி வரை பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுந்தர மகாலிங்கம் சுவாமி காட்சியளித்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் இன்றி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.
Related Tags :
Next Story